நகரங்களில் காரை பார்க்கிங் செய்வது பல சமயங்களில் பெரும் திண்டாட்டமாக
அமைந்துவிடும். தி.நகர் ரெங்கநாதன் தெரு போன்ற நெரிசல் மிகுந்த
பகுதிகளுக்கு செல்லும்போது எல்லோரையும் இறக்கிவிட்டு விட்டு பார்க்கிங்
செய்ய இந்த கடைசியிலிருந்து அந்த கடைசி வரை காரையும், கண்களையும் உருட்டி
பார்த்தாலும் எங்கு காலி இடம் இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதே பெரும்
தலைவலியாகவிடும்.
இதுபோன்று, பார்க்கிங் செய்வதற்காக வீதிவீதியாக அலைந்து தவிக்கும் சிரமத்தை போக்கும் வகையில், பிரிட்டனில் புதிய தொழில்நுட்ப வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, பார்க்கிங் பே என்று கூறப்படும் பார்க்கிங் செய்யும் பகுதிகளின் நடுவில் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பார்க்கிங் செய்ய வரும் கார் டிரைவர் மொபைல்போன் மூலம் பார்க்கிங் கட்டணத்தை செலுத்தினால் போதும். அந்த பகுதியில் காலியாக இருக்கும் பார்க்கிங் பே குறித்து மொபைல்போன் அல்லது டேப்லெட் கம்ப்யூட்டருக்கு தகவல் அடுத்த நொடி வந்துவிடும்.
அந்த எஸ்எம்எஸ் தகவலை வைத்து எந்த பார்க்கிங் பே காலியாக இருக்கிறதோ அதில் காரை எளிதாக பார்க்கிங் செய்து கொள்ளலாம். மேலும், பார்க்கிங் செலுத்தப்பட்ட குறிப்பிட்ட நேரம் முடிவடைவதற்கு முன்பாக கார் உரிமையாளருக்கு எஸ்எம்எஸ் தகவல் வரும்.
அதன்பிறகும் கார் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால் அதுகுறித்து போக்குவரத்து போலீசாருக்கு தகவல் அனுப்பப்பட்டுவிடும். குறிப்பிட்ட நேரத்தையும் தாண்டி கார் நிறுத்தியதற்காக, அபராதம் விதித்து அதற்கான நோட்டீசை போலீசார் அந்த காரின் முன்பக்க கண்ணாடி(வைன்ட்ஷீல்டு) ஒட்டிவிடுவர்.
இந்த புதிய வசதி கார் டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும் என்று பிரிட்டன் போக்குவரத்து துறையினர் தெரிவித்துள்ளனர்.